நடிகை சமந்தா தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார் .
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் சமந்தா. இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு பிரபல தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல், சாகுந்தலம் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் சமந்தா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இவரை இன்ஸ்டாகிராமில் 1 கோடியே 78 லட்சம் பேரும், டுவிட்டரில் 89 லட்சம் பேரும் பின்தொடர்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகை சமந்தா திடீரென தனது சமூக வலைதளப் பக்கங்களில் தனது பெயரை மாற்றியுள்ளார். அதன்படி சமந்தா அக்கினேனி என இருந்த பெயரை நீக்கி S என மாற்றியுள்ளார். அக்கினேனி என்பது நாகார்ஜுனா பரம்பரையின் குடும்பப் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது திடீரென சமந்தா எதற்காக தனது குடும்பப் பெயரை நீக்கினார் என ரசிகர்கள் குழப்பத்தில் உள்ளனர்.