Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

திடீரென பெயர்ந்து விழுந்த அரசு பள்ளியின் மேற்கூரை…. பரபரப்பு சம்பவம்…!!!

அரசு பள்ளி தலைமை ஆசிரியர் அறையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள பாவூர்சத்திரத்தில் இருக்கும் அவ்வையார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இந்த பள்ளியின் மையப்பகுதியில் தலைமை ஆசிரியர் அறையுடன் கூடிய அலுவலக கட்டிடம் அமைந்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தலைமை ஆசிரியை இருக்கையில் முன்பு திடீரென மேற்கூரை சிமெண்ட் பூச்சிகள் பெயர்ந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு விரைந்து சென்று மேற்கூரை பெயர்ந்து விழுந்த இடத்தை பார்வையிட்டனர். இதனை அடுத்து கட்டடத்தின் மேற்கூரையை முற்றிலும் அகற்றி விட்டு கான்கிரீட் தளம் அமைக்க வேண்டும் என மாணவர்களும், ஆசிரியர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Categories

Tech |