Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென போலீஸ் ஏட்டுவின் மகள் தூக்கிட்டு தற்கொலை…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. சோகம்….!!!!

சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் கலைவாணி (46). இவர், புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 10 வருடங்களுக்கு மேலாக கணவரை பிரிந்து அதே குடியிருப்பில் மகள் அக்சராவுடன் (15) வசித்து வருகிறார். இதில் அக்சரா முகப்பேரிலுள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 பயின்று வந்தார். நேற்று முன்தினம் கலைவாணி பணி முடிந்து அம்பத்தூரிலுள்ள அவரது அண்ணன் குணசேகரன் வீட்டுக்கு சென்று விட்டு, இரவு தன் வீட்டுக்கு திரும்பிவந்தார்.

அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. அதன்பின் நீண்ட நேரம் தட்டியும் அக்சரா கதவை திறக்காததால் கலைவாணி சந்தேகமடைந்தார். அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு தனது மகள் அக்சரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது தொடர்பாக கீழ்ப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். முதற்கட்ட விசாரணையில் அக்சரா உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Categories

Tech |