மாநகராட்சி ஊழியர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் உள்ள திருவல்லிக்கேணியில் காத்தவராயன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் மாநகராட்சி அலுவலகத்தில் ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். இவர் வழக்கம்போல் பணி முடிந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார். அப்போது திடீரென காத்தவராயன் மயக்கம் போட்டு விழுந்துள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் காத்தவராயனை ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு காத்தவராயனை பரிசோதித்த டாக்டர்கள் அவர் பூச்சிகளை அழிக்க பயன்படும் மருந்தை சாப்பிட்டதாக கூறியுள்ளனர்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் காத்தவராயன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் காத்தவராயன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காத்தவராயன் தற்கொலை செய்து கொண்ட காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்