டிராக்டர் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள கடையநல்லூரில் டிராக்டர் ஓட்டுநரான பண்டாரம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது டிராக்டரில் எம். சாண்ட் மணலை ஏற்றிக்கொண்டு கடையநல்லூர் புதிய பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென பண்டாரத்திற்கு மயக்கம் ஏற்பட்டதால் கட்டுப்பாட்டை இழந்த டிராக்டர் அருகில் இருந்த வயலில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பண்டாரத்தை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.