Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

“திடீரென மயங்கிய மாணவிகள்” அதிர்ச்சியில் பள்ளி நிர்வாகம்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு…!!

மாணவிகள் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கெட்டப்புதூரில் அரசு உண்டு உறைவிட பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் 300-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்நிலையில் வழக்கம்போல் உணவு உண்டுவிட்டு மாணவிகள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனையடுத்து வகுப்பறையில் இருந்த 10 மாணவிகள் திடீரென மயங்கி விழுந்துள்ளனர்.

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பள்ளி நிர்வாகம் மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக கரியாலூர்  அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மாணவிகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கரியைலூர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி பழங்குடியினர் மாவட்ட துணை ஆட்சியர் இளங்கோவன், தாசில்தார் அசோக் மற்றும் காவல்துறையினர் பள்ளிக்கூடத்திற்கு விரைந்து சென்றனர். இவர்கள் மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |