பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள நெற்குணம் மாரியம்மன் கோவில் தெருவில் கண்ணதாசன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஹோட்டலில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார்.நேற்று வேலை பார்த்து கொண்டிருந்த போது திடீரென கண்ணதாசன் மயங்கி விழுந்துவிட்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் கண்ணதாசனை மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் கண்ணதாசன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Categories