Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த மூதாட்டி…. அதிர்ச்சியடைந்த சக பணியாளர்கள்…. போலீஸ் விசாரணை…!!

மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள வளையாம்பட்டு பகுதியில் பெரியதாய் என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த மூதாட்டி வளையம்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட ஏரி பகுதியில் 100 நாள் பணியில் ஈடுபட்டுள்ளார். அப்போது திடீரென மூதாட்டி மயங்கி விழுந்துள்ளார்.

இதனை பார்த்து அதிர்ச்சடைந்த சக பணியாளர்கள் மூதாட்டியை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வாணியம்பாடி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |