Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திடீரென மயங்கி விழுந்த யானை…. தோல்வியில் முடிந்த வனத்துறையினரின் முயற்சி…!!

வனத்துறையினர் அளித்த சிகிச்சை பலனின்றி காட்டுயானை பரிதாபமாக உயிரிழந்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைக்கட்டி வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வாழ்ந்து வருகின்றன. இந்த காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 30 வயது மதிக்கத்தக்க பெண் காட்டுயானை ஆனந்த் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் திடீரென மயங்கி விழுந்துவிட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் எழுந்திருக்க முடியாமல் சிரமப்பட்ட காட்டு யானைக்கு 30 பாட்டில் குளுகோஸ் ஏற்றியுள்ளனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி அந்த காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது.

Categories

Tech |