உயிரிழந்த வாலிபரின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள மிராளூர் கிராமத்தில் செந்தில் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜெயசூர்யா என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஜெயசூர்யா கச்சிராயப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து நேற்று ஜெயசூர்யா திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் ஜெயசூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அங்கு ஜெயசூர்யாவை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் ஜெயசூர்யாவின் இறப்பில் மர்மம் இருப்பதாக கூறி மருத்துவமனை வாசலில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜலட்சுமி உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஜெயசூர்யாவின் உறவினர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஜெயசூர்யாவின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.