நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கடந்த ஜூன் மாதம் மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட் ஒன்றில் இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் திருமணத்தில் புகைப்படங்கள் எடுப்பதற்கு கட்டுப்பாடு என பல்வேறு தடைகள் போடப்பட்டிருந்த நிலையில் தற்போது திருமண புகைப்படங்கள் ஒவ்வொன்றாக விக்னேஷ் சிவன் வெளியிட்டு வருகிறார். திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற இவர்கள் கடந்த மாதம் சென்னை திரும்பிய நிலையில் மீண்டும் அவரவர் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நயன்தாரா சாப்பிட்ட உணவின் ஒவ்வாமை காரணமாக திடீரென்று வாந்தி எடுத்ததாகவும் அதனால் அவரது கணவர் விக்னேஷ் சிவன் நயன்தாராவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் மருத்துவமனையில் ஒரு சில மணி நேரம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் அவரை டிஸ்சார்ஜ் செய்துள்ளனர் .ஆனால் இந்த செய்தி இதுவரை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனால் உறுதி செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.