ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆவியூர் கிராமத்தில் ராமர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ராமர் ஆடுகளை மேய்த்து விட்டு இரவு நேரத்தில் வீட்டின் கூடத்தில் அடைத்து வைத்து விட்டு தூங்கிவிட்டார். மறுநாள் காலை எழுந்து பார்த்தபோது இரண்டு ஆட்டுக்குட்டிகள் கணமல் போனது கண்டு ராமர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து ராமர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆடுகளை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.