இருசக்கர வாகனத்தில் ஆடை திருடி சென்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பட்டணம்காத்தான் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் வசித்து வரும் பாலமுருகன் என்பவர் தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வருகின்றார். இந்நிலையில் சம்பவத்தன்று பாலமுருகன் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு ஆடு மட்டும் காணாமல் போயிருந்தது. இதனையடுத்து பாலமுருகன் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் ஆடு கிடைக்காததால் இது குறித்து கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் 2 பேர் இருசக்கர வாகனத்தில் பாலமுருகனின் ஆடை திருடி செல்வது பதிவாகியிருந்தது. அதன் அடிப்படையில் ஆடை திருடிய அண்ணாநகரை சேர்ந்த சங்கர் மற்றும் ராஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.