காணாமல் போன இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள காக்காயம்பட்டி கிராமத்தில் முத்துசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அனிதா(19) என்ற மகள் இருந்துள்ளார். இவர் சத்தியமங்கலம் அருகே இருக்கும் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் வீட்டிலிருந்து வெளியே சென்ற அனிதா நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இதனால் முத்துசாமி தனது மகளை பல்வேறு இடங்களில் தேடி அலைந்துள்ளார். ஆனாலும் அவர் கிடைக்காததால் முத்துசாமி தோகைமலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் காணாமல் போன அனிதாவை தீவிரமாக தேடி வருகின்றனர்.