நட்சத்திர விடுதியில் திடீரென காவலர்கள் குவிந்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் 45 பேரூராட்சிகளில் உள்ளாட்சி தேர்தல் நடந்தது. அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இந்நிலையில் மேயர் மற்றும் துணை மேயருக்கான மறைமுக தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க வை சேர்ந்த சுந்தரி என்பவர் மேயராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதற்கு தி.மு.க வைச் சேர்ந்த ஐயப்பன் எம்.எல்.ஏ எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இவர் தனக்கு ஆதரவான கவுன்சிலர்களை ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் தங்க வைத்துள்ளார். இந்நிலையில் அங்கு தங்கி இருந்த 20 கவுன்சிலர்கள் மேயர் பதவியில் ஓட்டு போடுவதற்காக சென்றுள்ளனர். அப்போது நட்சத்திர விடுதியின் முன்பாக 300-க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் விடுதியில் தங்கியிருந்த கவுன்சிலர்களை ஓட்டு போட விடாமல் அங்கேயே நிறுத்தி வைத்தனர்.