Categories
சென்னை மாவட்ட செய்திகள்

வேற லெவல் போலீஸ்…. மாயமான குழந்தை 1 மணி நேரத்தில் மீட்பு…. துப்பு துலங்கியது எப்படி….? பரபரப்பு….!!!!

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த குழந்தையை கடத்திச் சென்ற ஆட்டோ டிரைவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

சென்னை சிட்லப்பாக்கம் திருமலை நகரில் வினோத் என்பவர் வசித்து வருகிறார். இவர் பெருங்களத்தூரில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 4 வயதில் வர்ஷா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் வர்ஷா வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருக்கும் போது ஆட்டோவில் வந்த மர்ம நபர் ஒருவர் சிறுமியை கடத்தி சென்றுள்ளார்.

இதனை பார்த்த அங்குள்ள குழந்தைகள் வர்ஷாவின் தந்தை வினோத்திடம் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வினோத் இது குறித்து சிட்லப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் ஆய்வு செய்து ஆட்டோவின் எண்ணை வைத்து சிட்லபாக்கம் பகுதி முழுவதும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை மடக்கி பிடித்து சோதனை செய்த போது அதில் கடத்தப்பட்ட குழந்தை இருந்தது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து ஆட்டோவில் இருந்து குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினர் ஆட்டோ டிரைவரை சிட்லபாக்கம் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ராதா நகர் பகுதியில் வசிக்கும் சம்சுதின் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர் மதுபோதையில் குழந்தையை கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இந்நிலையில் சுமார் 1 மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குழந்தையை பத்திரமாக மீட்ட காவல்துறையினரை அதிகாரி பாராட்டினார்.

Categories

Tech |