சிறுமியை கடத்தி சென்ற டிரைவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த 10-ஆம் தேதி திடீரென காணாமல் போன சிறுமியை அவரது பெற்றோர் அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் சிறுமி கிடைக்காததால் அவரது பெற்றோர் தங்களது மகளை காணவில்லை என பொள்ளாச்சி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் ஆத்துப்பொள்ளாச்சியை சேர்ந்த டிரைவரான குமார் என்பவரும், சிறுமியும் காதலித்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறி குமார் சிறுமியை கடத்தி சென்றுள்ளார். அதன்பின் சேலத்தில் பதுங்கி இருந்த குமாரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மேலும் சிறுமியை மீட்டு அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துவிட்டனர்.