கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குலசேகரம் பகுதியில் வசிக்கும் 16 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 26-ஆம் தேதி இரவு நேரம் சாப்பிட்டுவிட்டு மாணவி தூங்க சென்றுள்ளார். மறுநாள் காலை அவர் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் இது குறித்து மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில், பனவிளை பகுதியைச் சேர்ந்த ஆகிஷ் செல்வன்(26) என்பவர் காதலிப்பதாக ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை சென்னைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து சென்னைக்கு சென்ற போலீசார் ஒரே வீட்டில் தங்கியிருந்த மாணவியை மீட்டனர். மேலும் போக்சோ சட்டத்தின் கீழ் செல்வனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவர் ஏற்கனவே ஒரு குற்ற வழக்கில் கைதாகி சிறை சென்ற வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.