Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

திடீரென மாயமான புதுப்பெண்…. தேடி அலைந்த பெற்றோர்…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

புதுப்பெண் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள மாவடிபாளையம் பகுதியில் 19 வயது கல்லூரி மாணவி வசித்து வருகிறார். இவருக்கும் கீழ்மாம்பட்டு பகுதியைச் சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நடத்த பெற்றோர் நிச்சயம் செய்தனர். வருகிற 25-ஆம் தேதி இருவருக்கும் திருமணம் நடத்த முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் புதுப்பெண் இரவு நேரத்தில் குடும்பத்தினருடன் அமர்ந்து சாப்பிட்டு விட்டு தூங்கியுள்ளார். நேற்று காலை எழுந்து பார்த்தபோது புதுப்பெண் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.

ஆனாலும் அவர் கிடைக்காததால் உடனடியாக திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் புதுப்பெண் தன்னுடன் கல்லூரியில் படிக்கும் ஒரு வாலிபரை காதலித்து வந்தது தெரியவந்தது. இதனையடுத்து பெற்றோர் திருமண ஏற்பாடுகளை செய்து வந்ததால் பெண் தனது காதலனுடன் ஓட்டம் பிடித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |