சைக்கிளை திருடிய குற்றத்திற்காக 2 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவரபாளையம் கிராமத்தில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இந்த சிறுவன் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் மணிகண்டனின் சைக்கிள் திடீரென காணாமல் போனது. இதுகுறித்து அவரது தந்தை சங்கரபாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தென்னூரில் வசிக்கும் 17 மற்றும் 15 வயது சிறுவர்கள் இணைந்து மணிகண்டனின் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் இரண்டு சிறுவர்களையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.