Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

திடீரென முறிந்த மரம்….. அதிஷ்டவசமாக தப்பிய மாணவர்கள்…. தீயணைப்பு துறையினர் நடவடிக்கை….

பள்ளியில் மரம் முறிந்து விழுந்ததால் பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்துள்ள கண்ணாடிபட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 18 மாணவிகள் மற்றும் 4 மாணவர்கள் என மொத்தம் 22 பேர் படித்து வருகின்றனர். இந்நிலையில் பள்ளியின் முன்பு இருந்த பழமையான மரம் ஒன்று அதிகாலையில் திடீரென முறிந்து பள்ளியின் கட்டிடத்தின் மீது விழுந்துள்ளது. இதனைஅடுத்து பள்ளியை சுத்தம் செய்வதற்காக வந்த பணியாளர்கள் மரம் முறிந்து விழுந்து இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து உடனடியாக தலைமை ஆசிரியருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவலறிந்து சென்ற தலைமை ஆசிரியர் அசரபுநிஷா, ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளி கட்டிடத்தின் சேதம் குறித்த பார்வையிட்டுள்ளனர். இதற்குபின் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சரிந்து விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாலையில் மரம் முறிந்து விழுந்ததால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளனர்.

Categories

Tech |