Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென மோதிய வாகனம்…. முறிந்து விழுந்த மின்கம்பி…. அதிர்ச்சியில் பொதுமக்கள்….!!

வாகனம் மோதியதில் மின்கம்பி முறிந்து கீழே விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன்மலை பகுதியிலிருந்து கச்சிராபாளையம் வரை 20 கிலோ மீட்டர் நீளத்தில் சாலை அமைந்துள்ளது. இதில் குண்டியாநத்தம் பகுதியில் ஒரு மின்கம்பம் அமைந்துள்ளது. இந்த மின் கம்பத்தின் மீது ஒரு வாகனம் மோதி முறிந்து கீழே விழுந்துள்ளது.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து மின்வாரியத்துறைக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த மின்வாரியத்துறை ஊழியர்கள் கீழே கிடந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு  புதிய மின் கம்பம் வைத்தனர். அதன்பிறகு மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Categories

Tech |