சீனாவில் ஷாங்காய் நகரில் பெட்ரோகெமிக்கல் என்கின்ற ரசாயன ஆலை அமைந்துள்ளது. இது சீனாவின் மிகப்பெரிய ரசாயனம் ஆலை ஆகும். இந்த ஆலையில் நேற்று அதிகாலை திடீரென தீ பிடித்தது. இந்த தீ உடனே பல இடங்களில் பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் ஷாங்காய் நகரின் வான் முழுவதும் புகை மண்டலமாக காணப் பட்டது.
இதனையடுத்து 500க்கு மேல் அதிகமான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் பல மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீ முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இருப்பினும் இந்தத் தீ விபத்தில் ஒருவர் உடல் கருகி பலியானார். மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.