Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

திடீரென லாக்கான ஸ்டேரிங்…. சாலையில் கவிழ்ந்த வேன்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய நால்வர்…!!

கட்டுப்பாட்டை இழந்த வேன் விபத்துக்குள்ளானதில் 4 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி விட்டனர்.

திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறை பகுதியிலிருந்து வேன் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த வேன் திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சொரியம்பட்டி பெட்ரோல் விற்பனை நிலையம் அருகில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென ஸ்டேரிங் லாக்கானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்து விட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக 4 பேர் உயிர் தப்பிவிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |