Categories
உலக செய்திகள்

திடீரென வங்கிக்குள் நுழைந்த காளை மாடு… பீதியில் பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!!

திடீரென வங்கிக்குள் மாடு ஒன்று நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்ரேல் நாட்டிலுள்ள டெல் அவிவ் நகரில் ஒரு வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் நேற்று காலை திடீரென ஒரு காளைமாடு நுழைந்தது. இந்த மாட்டை பார்த்ததும் வங்கியில் இருந்தவர்கள் பயந்து போய் ஒளிந்து கொண்டனர். இந்த மாட்டை ஒருவர் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார். அவரையும் மாடு முட்ட வந்ததால் அங்கிருந்து ஓடிவிட்டார்.

இந்நிலையில் நீண்ட நேரமாக வங்கிக்குள் சுற்றிக் கொண்டிருந்த மாடு அங்கிருந்து வெளியேறியதால் மக்கள் சற்று நிம்மதி அடைந்தனர். இதனையடுத்து அந்த மாடு சாலையில் நின்று கொண்டிருந்தவர்களை பயம் காட்டியது. அதன்பிறகு கால்நடை அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காளை மாட்டை அடக்கி அங்கிருந்து இழுத்துச் சென்றனர். மேலும் வங்கிக்குள் மாடு நுழைந்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Categories

Tech |