மத்திய பிரதேச மாநிலத்தில் பண்ணாவில் வைர சுரங்கங்கள் அதிகமாக உள்ளது. அங்கு பலரும் வைரஸ் அரங்குகளை அரசாங்கத்திடமிருந்து குத்தகைக்கு எடுத்து, வைரம் அகழ்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி அவர்கள் தோண்டி எடுக்கும் வைரங்கள் அனைத்தும் ஏலம் விடப்பட்டு, அதில் கிடைக்கும் மொத்த தொகையும் சம்பந்தப்பட்டவருக்கே வழங்கப்பட்டு வருகிறது.அதில் அரசாங்கத்திற்கான கட்டடம் மற்றும் வரி போன்றவற்றை மட்டும் செலுத்தினால் போதும்.
அவ்வகையில் ரத்தன்லால் பிரஜாபதி என்ற தொழிலாளி ஒருவர் 8.22 கேரட் மதிப்புள்ள ஒரு வைரத்தை சமீபத்தில் தோண்டி எடுத்துள்ளார். அது நேற்று முன்தினம் ஏலம் விடப்பட்டது. அதில் அந்த தொழிலாளிக்கு 37.07 லட்சம் கிடைத்தது. இந்த வைரத்துடன் சேர்த்து மொத்தம் 61 வைரங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்பட்டது. அதே மொத்தம் ரூ.1,27,71,000விற்பனை செய்யப்பட்டதாக ஆட்சியர் அலுவலகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.