வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்த பெண் பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அடுத்துள்ள ராசாம்பாளையம் பகுதியில் கலியபெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். தொழிலாளியான இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் இவர் வீட்டு வேலைகளை முடித்து விட்டு இரவில் வீட்டிற்கு அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அப்பகுதியில் இருந்த பாம்பு எதிர்பாராதவிதமாக லட்சுமியை கடித்துள்ளது.
இதில் அவர் மயக்கம் அடைந்து அங்கேயே கீழே விழுந்துள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக லட்சுமியை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையிலும் லட்சுமி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்து சென்ற மண்ணச்சநல்லூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.