விஷப் பாம்பை தீயணைப்பு வீரர்கள் பத்திரமாக பிடித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூர் மேலப்பட்டி பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவரது வீட்டிற்குள் திடீரென விஷப்பாம்பு புகுந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அலறியடித்து கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடிவந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு விஷப்பாம்பை உயிருடன் பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட பாம்பு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.