மோட்டார் சைக்கிளை திருட முயன்ற 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டத்திலுள்ள சக்காங்குடி கிராமத்தில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தேவராஜ் என்ற மகன் உள்ளார். இந்நிலையில் தேவராஜ் தனக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளை வீட்டிற்கு முன்பு நிறுத்தி வைத்துள்ளார். அப்போது அங்கு சென்ற இரண்டு வாலிபர்கள் தேவராஜின் மோட்டார்சைக்கிளை திருட முயற்சி செய்தனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் இரண்டு பேரையும் கையும் களவுமாக பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அந்த வாலிபர்கள் கோ.பாடி கிராமத்தைச் சேர்ந்த சேட்டு மற்றும் மணிகண்டன் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சேட்டு மற்றும் மணிகண்டன் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.