ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளால் வெட்டிய 2 வாலிபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள ரஸ்தாகாடு பகுதியில் பால்ராஜா(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஆவார். நேற்று முன்தினம் பால்ராஜ் மோட்டார் சைக்கிளில் சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மீன்களை வாங்கி விட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் பால்குடம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது லீபுரம் பகுதியை சேர்ந்த ராபர்ட்சிங்(22), பெலிக்ஸ்(27) ஆகியோர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால்ராஜாவை சரமாரியாக வெட்டியுள்ளனர்.
இதனால் படுகாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் ராபர்ட்சிங் மற்றும் பெலிக்ஸ் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.