மேற்கு தொடர்ச்சி மலை கொடைக்கானல் பகுதியில் போர் விமானங்கள் ஒரே நேரத்தில் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியான மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளின் வீட்டின் மேல்தளத்தில் மிக அருகில் கூட்டாக போர் விமானங்கள் அதிவேகமாக வந்தன. அப்போது அதனை வேடிக்கை பார்க்க மொட்டை மாடிக்கு சென்ற மாணவிகள் 2 பேர் கீழே விழுந்து தலையில் அடிபட்டதால் தலைமை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். விசாரணையில் கொடைக்கானல் மேற்கு தொடர்ச்சி மலை தமிழகம், கேரளா மாநில எல்லை பகுதியாக இருப்பதால் ராணுவ விமானம் பயிற்சி மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.