வனப்பகுதிக்குள் சிறுத்தைகள் இறந்து கிடந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோத்தகிரி பகுதியில் வனச்சரகர் சிவா தலைமையிலான ஒரு குழு வனப்பகுதிக்குள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருக்கும் போது துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த வனத்துறையினர் துர்நாற்றம் வீசிய இடத்திற்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது 2 சிறுத்தைகள் அழுகிய நிலையில் இறந்து கிடந்தது. இதுகுறித்து வனத்துறையினர் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின்படி வன அலுவலர் சச்சின் மற்றும் உதவி வன அலுவலர் சரவணகுமார் மற்றும் கால்நடை மருத்துவர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அதன்பிறகு இறந்த சிறுத்தைகளின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில் 7 வயது மதிக்கத்தக்க பெண் சிறுத்தையும், 5 வயது மதிக்கத்தக்க பால் இனம் தெரியாத மற்றொரு சிறுத்தையும் திறந்து கிடந்துள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகே சிறுத்தைகள் இறந்ததற்கான காரணம் தெரியவரும் என கூறியுள்ளனர்.