முதியவர் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க நாட்டில் உள்ள புரூக்களின் நகரத்தில் ஜான் ருகேரா என்ற முதியவர் வசித்து வந்துள்ளார். இவருடைய குடியிருப்பில் இருந்து திடீரென பயங்கர துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக மோமோ என்பவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஜான் வீட்டை சோதனை செய்தபோது அழுகிய நிலையில் ஜான் பிணமாக கிடந்தார்.
இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த காவல்துறையினர் ஜான் வீட்டை சோதனை செய்தது ஒரு துண்டு காகிதம் ஒன்று கிடைத்தது. அதில் எச்சரிக்கை, ஆபத்து என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.