Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீரென வீட்டில் பற்றிய தீ…. பொருட்கள் எரிந்து நாசம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

சோழவந்தான் பகுதியில் உள்ள ஒரு சலவைத் தொழிலாளி வீட்டில் தீப்பற்றி எரிந்து பொருள்கள் சேதமடைந்துள்ளது.

நாளை நாடு முழுவதும் சிவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அழகர் கோவில் தீர்த்தம் எடுக்க மதுரை மாவடடம், சோழவந்தான் ஆர்.சி நடுநிலை பள்ளிக்கு எதிரில் வசித்துவரும் பாண்டி- தேவி இவர்கள் ரெண்டு பேரும் சென்றுவிட்டனர். பாண்டி சலவை தொழில் பார்த்து வருகிறார். இந்நிலையில்  எதிர்பாராத விதமாக பாண்டியின்  வீட்டில் தீ பற்றி எரிந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் உடனே சோழவந்தான் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர் மற்றும் நிலைய அலுவலர் பழனி முருகன் நீண்ட நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர். இதனால் வீட்டில் உள்ள பொருள்கள் மற்றும் வாடிக்கையாளர் தந்த துணிகள் எல்லாம் எரிந்து நாசமாயின. இதை கிராம நிர்வாக அலுவலர் சிவராமன் நேரில் வந்து பார்வையிட்டார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |