நாட்டு வெடி வெடித்து விவசாயி படுகாயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அகூர் கிராமத்தில் விவசாயியான ராமு என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே ஊரில் ஒரு நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் சாகுபடி செய்துள்ள பயிர்களை நாசப்படுத்தும் கொக்கு, காட்டுப்பன்றி உள்ளிட்டவைகளை விரட்டுவதற்காக ராமு நாட்டு வெடிகளை வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை ராமு வீட்டில் இருந்தபோது திடீரென நாட்டு வெடிகள் வெடித்து சிதறியதால் அவரது உடலில் பல்வேறு இடங்களில் படுகாயம் ஏற்பட்டது.
அவரது சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் ராமுவை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.