Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த கேஸ் சிலிண்டர்…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!!!

திடீரென ஏற்பட்ட தீ விபத்தால் கூரைவீடு முற்றிலுமாக எரிந்து நாசமானது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கச்சிராபாளையம் அருகே குரும்பலூர் கிராமத்தில் ராஜா- ஜெயமணி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 10 மாதத்தில் ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் ஜெயராணி சமையல் செய்வதற்காக சிலிண்டரை ஆன் செய்துள்ளார். அப்போது சிலிண்டரில் கசிவு ஏற்பட்டு திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயமணி வீட்டை விட்டு வெளியே ஓடினார்.

இவருடைய கணவர் ராஜா வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை தூக்கிக் கொண்டு வெளியே வந்தார். அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு முழுவதுமாக தீப்பிடித்து எரிந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில்  எரிந்து நாசமானது. இதுகுறித்து கரியாலூர் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |