Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. உராய்வு காரணமாக தீப்பிடித்து எரிந்த லாரி…. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

லாரியில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்ட அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் இருந்து பிளாஸ்டிக் கழிவு பொருட்களை ஏற்றிக்கொண்டு டெல்லி நோக்கி லாரி ஒன்று புறப்பட்டது. இந்த லாரியை ஜிந்தா என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் மதுரை- திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் மேம்பாலத்தில் சென்றபோது திடீரென வாகனத்தின் பின்பக்க டயர் வெடித்தது. அப்போது உராய்வு காரணமாக லாரி தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் உடனடியாக லாரியை சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் லாரியின் பின்பக்க டயர்கள் எரிந்து நாசமானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |