டயர் வெடித்து மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளானதில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பூதலூரில் மகேந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது உறவினரான அரவிந்த் என்பவருடன் கல்லணையில் மீன்பிடித்து விட்டு கந்தர்வக்கோட்டையில் விற்பனை செய்வதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் வடுகப்பட்டி நண்பன்பண்ணை அருகே சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் பின்புற டயர் திடீரென வெடித்தது.
இதனால் நிலைதடுமாறி இரண்டு பேரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மகேந்திரன் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.