Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த டயர்…. சாதூர்யமாக செயல்பட்ட ஓட்டுனர்…. உயிர் தப்பிய பயணிகள்…!!

பேருந்தின் டயர் வெடித்த விபத்தில் அதிஷ்டவசமாக 60 பயணிகள் உயிர் தப்பி விட்டனர்.

திருச்சி-காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் 60-க்கும் மேற்பட்ட பயணிகளோடு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள இரங்கம்மாள் சத்திரம் என்ற பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென முன்பக்க டயர் வெடித்து விட்டது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தாறுமாறாக ஓடி உள்ளது.

அப்போது பேருந்து ஓட்டுனரான தமிழ் மாறன் என்பவர் புத்திசாலித்தனமாக செயல்பட்டு பேருந்தை நிறுத்தி விட்டார்.. இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பி விட்டனர் அதன்பிறகு பயணிகளை மாற்று பேருந்து மூலம் அனுப்பி வைத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |