Categories
தேசிய செய்திகள்

திடீரென வெளியான ஜாக்பாட் அறிவிப்பு….. சட்டப்பேரவை எம்.எல்.ஏக்களின் சம்பளம் அதிரடி உயர்வு….!!!

சட்டப்பேரவை உறுப்பினர்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகிவுள்ளது.

தலைநகர் டெல்லி யூனியன் பிரதேசமாக இருந்தாலும் அதற்கு சட்டப்பேரவை என்ற அந்தஸ்தும் இருக்கிறது. சட்டப்பேரவையில் உள்ள 70 எம்.எல்.ஏக்களின் சம்பளம் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு திருத்தப்பட்டது. இவர்கள் தங்களுடைய குடும்பம் மற்றும் அலுவலகத்தில் நடத்துவதற்கு சம்பளம் போதுமானதாக இல்லை எனக்கூறி சம்பளத்தை உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இது தொடர்பாக கடந்த 2015-ம் ஆண்டு ஆம் ஆத்மி கட்சியின் எம்.எல்.ஏக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இது தொடர்பாக ஆய்வு செய்ய பிடிடி ஆச்சாரி தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அறிக்கை அனுப்பாமல் அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டது. இந்நிலையில் ஆம் ஆத்மி கட்சியினர் மீண்டும் சம்பள உயர்வு தொடர்பாக கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி எம்.எல்.ஏக்களின் ஊதியம் 54 ஆயிரம் ரூபாயில் இருந்து 90 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் டெல்லி மாநில எம்.எல்.ஏக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |