Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

திடீரென வெளியேறிய தீ…. தூக்கி வீசப்பட்ட ஊழியர்கள்…. மேலாளர் பரிதாபமாக பலி….!!

காகித ஆலை பிளாண்டில் நடந்த தீ விபத்தில் என்ஜினீயர் உள்பட 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மேலாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலை வளாகத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு காகித ஆலை நிறுவனத்தின் பிளாண்ட் மூலம் சர்க்கரை ஆலையில் அரவை பணி நடைபெறும். இந்நிலையில் கடந்த மாதம் பொங்கல் பண்டியையொட்டி சர்க்கரை ஆலையில் அரவை பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி மீண்டும் பணிகள் தொடங்கியுள்ளது.

இதனையடுத்து காகித ஆலை பிளாண்டில் பாய்லர் பற்ற வைக்கும் பணியில் முதுநிலை மேலாளர் மணிவண்ணன்(54),பிளாண்ட் என்ஜினீயர் ஜெகதீசன்(35) மற்றும் ஊழியர்கள் சதீஸ்குமார், கோபால் ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது பிளாண்டில் இருந்து நெருப்பு வராததால் அவர்கள் பாய்லர் கதவை திறந்துள்ளனர். இந்நிலையில் பாய்லரில் இருந்து திடீரென நெருப்பு வெளியேறியதால் அங்கு நின்று கொண்டிருந்த 4 பெரும் துக்கிவீசப்பட்டனர்.

இந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பேரையும் கரூர் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அள்ளிக்கப்பட்டு வந்த நிலையில் முதுநிலை மேலாளரான மணிவண்ணன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார். இதுகுறித்து மோகனூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |