இயக்குனர் சமுத்திரக்கனியின் அலுவலகத்திற்குள் நுழைந்த பெண் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள மதுராவாயல் பகுதியில் திரைப்பட இயக்குனரான சமுத்திரக்கனியின் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்திற்குள் கடந்து செவ்வாய்க்கிழமை அத்துமீறி நுழைந்த ஒரு பெண் அலுவலகத்தில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் மீது ஏறி அமர்ந்துள்ளார்.
பின்னர் சிறிது நேரம் அங்கு இங்குமாக நடந்தந்ததோடு அங்கு காய வைக்கப்பட்டிருந்த மலை அங்கியை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார். இந்த காட்சி அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதுகுறித்து சமுத்திரக்கனியின் மேலாளர் விவேக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.