Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

திடீர்னு இப்படி செஞ்சிட்டாரு…. சக ஊழியர்கள் அதிர்ச்சி…. போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் வாலிபர் விஷத்தினை குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் முருகன் என்பவர் வசித்து வந்தார். இந்நிலையில் இவர் பொட்டலில் இருக்கும் தனியார் பால்பண்ணையில் பணிபுரிந்து வந்துள்ளார். இதனையடுத்து அவர் பணிபுரியும் பால் பண்ணையினுள் திடீரென்று விஷத்தை குடித்து மயங்கி கீழே விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் முருகனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவருக்கு மருத்துவர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த பாளையங்கோட்டை காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |