தேனியில் முல்லைப் பெரியாற்றில் குளிக்க சென்று வெளியே வர முடியாமல் தத்தளித்த 3 மாணவர்களை தீயணைப்புத் துறையினர் உயிருடன் மீட்டனர்.
தேனி மாவட்டம் கம்பத்தில் சாருகேஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியிலிருக்கும் ஸ்கூலில் 10 ஆம் வகுப்பு பயின்று வருகிறார். இந்நிலையில் இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து கம்பத்திலிருக்கும் முல்லைப் பெரியாற்றின் தடுப்பணையில் குளிப்பதற்காக சென்றுள்ளார்கள். அங்கு மாணவர்கள் 3 பேரும் சந்தோஷமாக குளித்துக் கொண்டிருக்கும் போது, ஆற்றில் திடீரென்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.
இதனால் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த 3 மாணவர்களும் வெளியே வரமுடியவில்லை. இதற்கிடையே இவர்கள் 3 பேரும் ஆற்றின் மையத்திலிருந்த கல் திண்டை பிடித்துக் கொண்டு கத்தி கூச்சலிட்டனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள் 3 பேரையும் உயிருடன் மீட்டனர்.