நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் கோயிலுக்கு சென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. இவர் லேடி சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகின்றார். இவர் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். இவர் தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவனுடன் காதல் மலர்ந்துள்ளது. இந்நிலையில் இவர்கள் இருவரும் அடிக்கடி தாங்கள் இணைந்திருக்கும் புகைப்படத்தை இணையத்தில் வெளியிடுகின்றனர். ரசிகர்கள் மற்றும் சினிமா வட்டாரங்கள் எப்போது கல்யாணம் என கேட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நயன்-விக்கி தாங்கள் வாங்கியுள்ள புதிய காருக்கு பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் காரின் அருகில் இணைந்து நிற்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. மேலும் இவர்கள் இருவரும் காத்துவாக்குல இரண்டு காதல் திரைப்படத்தில் இணைந்து பணியாற்றி வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.