Categories
மாநில செய்திகள்

திடீர்னு பாதாள சாக்கடைக்குள் விழுந்த பெண்…. பதபதைக்கும் சம்பவம்…. மக்களின் முக்கிய கோரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது தொடங்கியுள்ளது. இதன் விளைவாக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் கனமழை தொடர்ந்து வருகிறது. சென்னையில் தொடர்ந்து மூன்றாவது நாளாக விடிய விடிய கனமழை பெய்து வருவதால் சாலைகளில் தண்ணீர் குளம் போல தேங்கியுள்ளது. இந்த மழையால் பெரம்பூர் பகுதி முழுவதுமாக நீர் சூழ்ந்துள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது திறந்து கிடந்த பாதாள சாக்கடைக்குள் எதிர்ப்பாராத விதமாக தவறி விழுந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த பகுதி மக்கள் அந்த பெண்ணை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும் அந்த பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அது மட்டும் இன்றி பொதுமக்களின் பாதுகாப்பிற்காக எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

Categories

Tech |