Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டாங்க..! இருதரப்பினர் பரபரப்பு புகார்… மொத்தமாக தூக்கிய காவல்துறை..!!

சிவகங்கையில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியவண்டாலை கிராமத்தில் சின்னத்தம்பி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முருகன் என்ற மகன் உள்ளார். மேலும் அதே பகுதியில் வசித்து வரும் முத்தழகு என்பவருக்கு காளை என்ற மகன் உள்ளார். இவர்கள் இருவர்களுடைய குடும்பத்தினருக்கும் இடையே நிலம் சம்பந்தமாக வழக்குகள் நிலுவையில் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் முருகனை சம்பவத்தன்று ஒரு சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். அதேபோல் காளையின் உறவினரான பாண்டியம்மாள் என்பவரையும் ஒரு சிலர் மோசமாக தாக்கியுள்ளனர். இது குறித்து இரு தரப்பினரும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் 11 பேர் மீது வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |