Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

திடீர்னு வந்து இப்படி பண்ணிட்டான்..! விசாரணையில் சிக்கிய வாலிபர்… போக்சோவில் தூக்கிய போலீஸ்..!!

பெரம்பலூரில் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை கத்தியால் மிரட்டி கடத்தி சென்ற வாலிபரை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசலூர் கிராமத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஒருவர் வயலில் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் தேதி வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மர்ம நபர்கள் சிலர் அவரை கத்தியால் மிரட்டி கடத்தி சென்றனர். இதுகுறித்து மாணவியின் தந்தை அரும்பாவூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில் பெரம்பலூர் அருகே ரங்கநாதபுரத்தை சேர்ந்த சோலைமுத்து என்பவரது மகன் மணிகண்டன் (22) தான் மாணவியை கடத்தி சென்றார் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடம் இருந்து மீட்கப்பட்ட மாணவி பெரம்பலூரில் உள்ள அரசு பெண்கள் காப்பகத்தில் பாதுகாப்பாக சேர்க்கப்பட்டுள்ளார்.

Categories

Tech |