Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திடீர்னு 2 மணி நேர சோதனை…. வருமானவரி துறையினருக்கு ரகசிய தகவல்…. மதுரையில் பரபரப்பு….!!

மதுரையில் வருமான வரித்துறையினர் பேரூராட்சி அலுவலகத்தில் அதிரடி சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்நிலையில் மதுரை மாவட்டம் டீ.கல்லுப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தில் ரூபாயை பதுக்கி வைத்து அப்பகுதி மக்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இத்தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் அப்பேரூராட்சி அலுவலகத்திற்கு சென்றது. அதன்பின் அந்த அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சுமார் 2 மணி நேரம் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். ஆனால் அங்கு எந்த பணமும் இல்லை என்பதால் வருமான வரித்துறையினர் திரும்பி சென்றனர்.

Categories

Tech |