Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

திடீர்ன்னு இப்படி ஆயிடுச்சு..! சாலை மறியலில் ஈடுபட்ட வாக்காளர்கள்… திண்டுக்கல்லில் பரபரப்பு..!!

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே வாக்குச்சாவடி மையத்தில் இருந்த வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது காரணமாக ஏற்பட்ட காலதாமத்தால் வாக்காளர்கள் கோபமடைந்து சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேத்தள முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சிலுக்குவார்பட்டியில் வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வாக்குச்சாவடி மையத்தில் வாக்களிப்பதற்காக வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதன் காரணமாக வாக்காளர்கள் வாக்களிப்பதில் தாமதம் ஏற்பட்டதால் கோபம் அடைந்தனர்.

இதையடுத்து சிலுக்குவார்பட்டி பகுதியில் உள்ள அம்மையநாயக்கனூர்-வத்தலகுண்டு சாலையில் அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து அவர்களை காவல்துறையினர் அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினர். இந்நிலையில் வாக்குப்பதிவு இயந்திரம் சரி செய்யப்பட்ட உடன் வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது. அதேபோல் நிலக்கோட்டையை அடுத்து உள்ள முசுவனூத்து கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் திடீரென வாக்குபதிவு இயந்திரத்தில் பழுது ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு அரை மணி நேரத்திற்கு நிறுத்தப்பட்டது. அதன்பின் எந்திரம் சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு தொடர்ந்து நடைபெற்றது.

Categories

Tech |